/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி, கி.புரத்தில் யோகா தின கொண்டாட்டம்
/
அரவக்குறிச்சி, கி.புரத்தில் யோகா தின கொண்டாட்டம்
ADDED : ஜூன் 22, 2025 01:25 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி மற்றும் இயற்கை வாழ்வியல் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். கரூரை சேர்ந்த யோகா நிபுணரும், மருத்துவருமான தாரணி சிறப்பாளராக பங்கேற்று, மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளித்தார். மேலும், இயற்கை வாழ்வியல் என்பது உடல், மனம் மற்றும் ஆன்மாவை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.
இயற்கை உணவுகள், மூச்சு பயிற்சி, யோகாசனம் மற்றும் இயற்கை வைத்திய முறைகள் உள்ளிட்டவை இதில் அடங்கும் என வலியுறுத்தப்பட்டது.
ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் காளீஸ்வரி, உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
* கிருஷ்ணராயபுரம் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற வளாகத்தில், யோகா பயிற்சி நடந்தது. மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் பாக்யராஜ் தலைமை வகித்தார். இங்கு, 10 விதமான யோகா பயிற்சி வழங்கப்பட்டது.
கிருஷ்ணராயபுரம் வக்கீல்கள் சங்க தலைவர் செந்தில்குமார், அரசு வக்கீல் ரமேஷ், சங்க செயலாளர் ரஹமத்துல்லா, துணை பொது பொருளாளர் வடிவேல், வட்ட சட்ட பணிக்குழு நிர்வாகி கிருஷ்ணவேணி மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.