/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'அரசு போக்குவரத்து கழகத்தில் தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்'

ADDED : செப் 21, 2025 01:12 AM
கரூர், அரசு போக்குவரத்து கழகத்தில், தொழில் பழகுனர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம், தொழில் பழகுனர் பயிற்சி வாரியம் இணைந்து, இணையதளம் மூலமாக பொறியியல் பட்டம், பட்டயபடிப்பு (இயந்திரவியல், தானியியங்கிவியல்) பொறியியல் அல்லாத கலை, அறிவியல், வணிகம் பட்டதாரிகளுக்காக பயிற்சி வழங்கவுள்ளனர்.
2021 முதல், 2025 வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, ஓராண்டு தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது. விபரங்களுக்கு இணையதளம் https://nats.education.gov.in வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அக்., 18க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.