/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புதிய தொட்டி அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
/
புதிய தொட்டி அமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை
ADDED : மார் 02, 2024 03:01 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, கடவூர் வட்டார இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட குழு உறுப்பினர் தினேஷ், கடவூர் யூனியன் கமிஷனர் சுரேஷிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
செம்பியத்தம் பஞ்., நல்லாக்கவுண்டம்பட்டியில் பஞ்., அலுவலகம் அருகில், பொதுமக்களின் குடிநீர் பயன்பாட்டிற்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்துள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளதால் தற்போது மேல்நிலை தொட்டி சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த தொட்டி யில் இருந்து, பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சேதமான குடிநீர் தொட்டியை அகற்றிவிட்டு, புதிய குடிநீர் தொட்டி கட்டவேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து யூனியன் கமிஷனர் சுரேஷ் கூறுகையில்,'' ஒன்றிய உதவி பொறியாளர் மூலம் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். யூனியன் கவுன்சிலர் ராமமூர்த்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் கார்த்திகேயன், சுதாகர், தினேஷ், பிரதீப், கேசவன், கோகுல்தாஸ், நாகேந்திரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

