ADDED : நவ 29, 2024 01:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வாகனம் மோதி வாலிபர் சாவு
அரவக்குறிச்சி, நவ. 29-
மலைக்கோவிலுாரில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, அடையாளம் தெரியாத வாலிபர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுார் பகுதியில் உள்ள, குடகனாறு பாலத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:30 மணியளவில் நடந்து சென்ற அடையாளம் தெரியாத, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில், வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, நாகம்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் சித்ரா அளித்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் விசாரித்து வருகின்றனர்.