/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
/
பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
ADDED : நவ 11, 2025 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், புலி யூர் வெள்ளாப்பட்டியை சேர்ந்த பிச்சை என்பவரது மகன் ரமேஷ், 34; இவர் கடந்த, 9ம் தேதி கரூர்-தி-ருச்சி சாலை புலியூர் பகுதியில் ஹீரோ ஸ்பிளண்டர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் கீழ-கோட்டையூர் பகுதியை சேர்ந்த செல்வராஜ், 39; என்பவர் ஓட்டி சென்ற அரசு பஸ், ரமேஷ் மீது மோதியது. இதில் தலையில் படு-காயமடைந்த ரமேஷ் மீட்கப் பட்டு, கரூர் அரசு மருத்துவக் கல்-லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதுகுறித்து ரமேஷ் மனைவி அபிராமி, 28, கொடுத்த புகார்-படி, பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

