/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிணற்றில் குதித்து வாலிபர் உயிரிழப்பு
/
கிணற்றில் குதித்து வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஆக 05, 2025 12:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, ஜங்கால்பட்டி பகுதியில் மதுவுக்கு அடிமையான வாலிபர் கிணற்றில் குதித்து உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே ஜங்கல்பட்டியை சேர்ந்தவர் சேகர் மகன் மணிகண்டன், 33. இவரும், இவரது மனைவியும் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்ததாக தெரிகிறது.
இதனால், மதுவுக்கு அடிமையான மணிகண்டன், நேற்று முன்தினம் இப்பகுதியில் உள்ள கிணற்றில் குதித்துள்ளார். அருகில் இருந்தவர்கள், நீண்ட நேரம் போராடி மணிகண்டனை சடலமாக மீட்டனர்.
அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.