ADDED : நவ 16, 2024 01:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாம்பு கடித்து வாலிபர் பலி
கரூர், நவ. 16-
கரூர் அருகே, பாம்பு கடித்ததில் வாலிபர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம், கொடுமுடி பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது மகன் ஸ்ரீ சக்தி, 20; இவர், கரூர் வேலாயுதம்பாளையம் அருகே, மேல ஒரத்தையில் உள்ள மதுரை வீரன் கோவிலுக்கு கடந்த, 8 ல் சென்றுள்ளார். பிறகு, அந்த பகுதியில் சிறுநீர் கழிக்க ஸ்ரீசக்தி சென்றுள்ளார். அப்போது பாம்பு அவரை கடித்துள்ளது. இதனால், ஆபத்தான நிலையில் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்ரீ சக்தி உயிரிழந்தார். இதுகுறித்து, ஸ்ரீ சக்தியின் தாய் சுமதி கொடுத்த புகார்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.