/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மண்டல துணை இயக்குனர் ஆய்வு
/
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மண்டல துணை இயக்குனர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மண்டல துணை இயக்குனர் ஆய்வு
புகழூர் தீயணைப்பு நிலையத்தில் மண்டல துணை இயக்குனர் ஆய்வு
ADDED : ஆக 14, 2025 02:10 AM
கரூர், புகழூர் தீயணைப்பு நிலையத்தில், மத்திய மண்டல துணை இயக்குனர் நேற்று ஆய்வு செய்தார்.கரூர் மாவட்டம், புகழூரில் தீயணைப்பு நிலையம் செயல்படுகிறது.
தீ விபத்து மற்றும் தடுப்பு பணிகளுக்கான பதிவேடுகள், துணை அழைப்பு விபரம், விபத்தில் சிக்கியவர்களை காப்பற்றியதன் விபரம், பட்டாசு கடைகள் அடங்கிய பதிவேடுகள், தீயணைப்பு கருவிகள் மற்றும் வாகனங்களின் தரம் ஆகியவற்றை, திருச்சி மத்திய மண்டல துணை இயக்குனர் முரளி, நேற்று ஆய்வு செய்து விளக்கம் கேட்டறிந்தார். பிறகு, தீயணைப்பு வீரர்களின் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. அப்போது, புகழூர் நிலைய தீயணைப்பு அலுவலர் சரவணன் உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் உடனிருந்தனர்.