/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரூர் ஒன்றிய தி.மு.க., நான்காக அதிகரிப்பு? செயலர் பதவி யாருக்கு; கட்சியினர் எதிர்பார்ப்பு

ADDED : மார் 02, 2025 01:23 AM
அரூர் ஒன்றிய தி.மு.க., நான்காக அதிகரிப்பு? செயலர் பதவி யாருக்கு; கட்சியினர் எதிர்பார்ப்பு
அரூர்:தர்மபுரி மேற்கு மாவட்ட, தி.மு.க.,வில், கட்சி ரீதியாக அரூர் ஒன்றியம் கிழக்கு, மேற்கு, வடக்கு என, மூன்றாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், மேலும் புதிதாக ஒரு ஒன்றியம் பிரிக்கப்படவுள்ள நிலையில், ஒன்றிய செயலர் பதவி யாருக்கு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் இடையே எழுந்துள்ளது.
இது குறித்து, தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: அரூர் ஒன்றியத்தில் மொத்தம், 34 பஞ்.,கள் உள்ளன. இவை கிழக்கு, மேற்கு, வடக்கு என மூன்றாக பிரிக்கப்பட்டு, முறையே சந்திரமோகன், சவுந்தரராஜன், வேடம்மாள் ஆகியோர் ஒன்றிய செயலர்களாக பதவி வகிக்கின்றனர். இந்நிலையில், அரூர் ஒன்றியம் மூன்றில் இருந்து, நான்காக அதிகரிக்கப்படவுள்ளது. இதற்காக பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட, அரூர் சட்டசபை தொகுதிக்கு வரும், மஞ்சவாடி, பட்டுக்கோணம்பட்டி, சித்தேரி ஆகிய மூன்று பஞ்.,கள் அரூர் ஒன்றியத்தில் இணைக்கப்படுகிறது.
புதிதாக ஒன்றியம் அதிகரிப்பது குறித்து, மூன்று ஒன்றிய செயலர்களிடம் மேற்கு மாவட்ட செயலர் பழனியப்பன் பேசியுள்ளார். மேலும் இது குறித்து, தலைமைக்கும் முறையாக தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில், தலைமையில் இருந்து அனுமதி கிடைத்து விடும். புதிதாக உருவாக்கப்படும் ஒன்றியத்திற்கு மாவட்ட செயலரின் ஆதரவாளரும், முன்னாள் ஒன்றியக்குழு தலைவருமான தென்னரசுவிற்கு ஒன்றிய செயலர் பதவி வழங்க வாய்ப்புள்ளது.
இருந்தபோதிலும், நீண்ட கால விசுவாசிகளுக்கு பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் கட்சியினர் இடையே
நிலவுகிறது. இவ்வாறு கூறினர்.