/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கரும்புக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் விலை நிர்ணயிக்க கோரிக்கை

ADDED : மார் 08, 2025 02:38 AM
கரும்புக்கு மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்தில் விலை நிர்ணயிக்க கோரிக்கை
கிருஷ்ணகிரி: தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த, 4 ஆண்டுகளுக்கு முன்பு, 8 லட்சம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வந்த நிலையில், உரிய விலை கொடுக்க வலியுறுத்தி கரும்பு நடவு நிறுத்தப் போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டதால், தற்போது, 3 லட்சம் ஏக்கர் பரப்பளவில் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. இதனால், 39 சர்க்கரை ஆலைகளில், 16 ஆலைகள் மூடப்பட்டுள்ளன.
இதே போல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 1,500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்து வந்த நிலையில் தற்போது, 500 ஏக்கரில் மட்டுமே கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு டன் கரும்புக்கு, 6,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று கடந்த, 4 ஆண்டுகளாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், தமிழகத்தில் ஒரு டன் கரும்புக்கு, 3,000 ரூபாய் வரை மட்டுமே விலை கொடுக்கப்படுகிறது. ஆனால் குஜராத்தில், 5,000 ரூபாயும், உத்தரபிரதேசத்தில், 4,800 ரூபாயும், மகாராஷ்டிராவில், 4,600 ரூபாயும் வழங்கப்
படுகிறது. தமிழகத்தில், 10 சதவீதம் உற்பத்தியாகும் சர்க்கரைக்கு மட்டுமே விவசாயிகளுக்கு விலை கொடுக்கப்படுகிறது. ஆனால் கரும்பில் இருந்து எடுக்கப்படும் மொலாசஸ் மது பானம் தயாரிக்கும் ஆலைக்கு அனுப்புவதால், அரசும், மதுபான ஆலை உரிமையாளரும், 20 மடங்கு லாபம் சம்பாதிக்கின்றனர். ஆனால் விவசாயிகளுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுகிறது. எனவே தமிழக அரசு கரும்புக்கு உரிய விலையை நிர்ணயிக்க முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.