/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
/
சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
ADDED : அக் 04, 2024 01:22 AM
சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம்
தொடரும் அதிகாரிகளின் அலட்சியம்
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி அருகே, சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பத்தை அகற்றாமல், கால்வாயை கட்டி வருவது தொடர்கிறது.
கிருஷ்ணகிரி ஒன்றியம், பெத்ததாளாப்பள்ளி பஞ்., ஆனந்த நகரில் நீண்ட நாட்களாக சாக்கடை கால்வாயின்றி கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி, கொசு உற்பத்தி அதிகமானது. நோய் பரவும் அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் பல முறை புகார் அளித்தனர். இதையடுத்து, பஞ்., நிதியிலிருந்து, 5.25 லட்சம் ரூபாய் செலவில், கடந்த ஆக., ல் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கி, கடந்த செப்., மாதம் பணிகள் முடிந்தன. சாக்கடை கால்வாய் நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், கால்வாயை கட்டியுள்ளதால், இப்போதே கழிவுகள் கம்பத்தை தாண்டி செல்ல வழியின்றி தேங்கி நிற்கிறது. இதனால், மீண்டும் கழிவுநீர் தேங்கும் அபாயம் உள்ளது. மற்றொரு பகுதியில், சாலை நடுவே உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்காமல், தரைப்பாலம் கட்டியுள்ளதால், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட, 4 சக்கர வாகனங்கள் வர முடியாத நிலை உள்ளது.
மேலும் இதே நகர் பகுதியில், ஆண்டுக்கணக்கில் சாலையோரம் கொட்டி வரும் குப்பைக்கு அடிக்கடி தீ வைப்பதால், புகையால் காற்று மாசு ஏற்படுவதோடு, குப்பை தொட்டியும் எரிந்து நாசமாகியுள்ளது. எனவே, இந்நகரிலுள்ள, 2 மின்கம்பங்களையும் மாற்றியமைத்தும், உடனே குப்பையை அள்ளியும், சேதமாகியுள்ள தார்ச்சாலையை புதுப்பித்து தரவும் வேண்டி, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.