/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கெலமங்கலம் டவுன் பஞ்., கூட்டம்குற்றச்சாட்டுகளை முன்வைத்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்

ADDED : ஜன 30, 2025 01:26 AM
கெலமங்கலம் டவுன் பஞ்., கூட்டம்குற்றச்சாட்டுகளை முன்வைத்து கவுன்சிலர்கள் வாக்குவாதம்
ஓசூர் :கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் டவுன் பஞ்., சாதாரண கூட்டம், தலைவர் தேவராஜ் தலைமையில் நேற்று நடந்தது. செயல் அலுவலர் மஞ்சுநாத் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: 13 வது வார்டு பா.ம.க., கவுன்சிலர் வெங்கடாசலபதி: மக்கள் நலத்திட்ட பணிகள் முறையாக எதுவும் நடப்பதில்லை. நேதாஜி நகர் ஜிபி பகுதியில் சமீபத்தில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலை கையால் பெயர்த்தாலே பெயர்ந்து வருகிறது. இப்படி தரம் குறைவாக சாலை போடப்பட்டுள்ளது. இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. உரிய முறையில் டெண்டர் விடாமல், ஒரு தலைப்பட்சமாக தலைவர் தேவராஜ் செயல்படுகிறார். டவுன் பஞ்.,த்தில் ஊழல் தலைவிரித்தாடுகிறது. அலுவலர்கள் பல ஆண்டுகளாக டவுன் பஞ்.,ல் பணியாற்றுவதால், ஒப்பந்ததாரர்களுடன் கைகோர்த்து எதற்கெடுத்தாலும் லஞ்சம் வாங்கி வருகின்றனர். வாக்களித்த மக்களை நேரில் சென்று சந்திக்க முடியாத நிலை
உள்ளது.5 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் விஜயஸ்ரீ: கெலமங்கலம் பஸ் ஸ்டாண்டையொட்டி, அதிக எண்ணிக்கையில் இறைச்சி கடைகள் செயல்படுகின்றன. இறைச்சி கழிவுகளை சாப்பிட ஏராளமான நாய்கள் வருவதால், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. சாலையின் குறுக்கே ஓடும் நாய்களால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இறைச்சி கழிவுகளை அருகில் உள்ள நீர்நிலைகளில் வீசி செல்வதால், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
இதே போல் கவுன்சிலர்கள் பலரும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, செயல் அலுவலர் மஞ்சுநாத் மற்றும் தலைவர் தேவராஜ் ஆகியோர் தெரிவித்தனர்.