/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்
/
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்
ADDED : பிப் 09, 2025 01:06 AM
பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம்
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 8 வட்டங்களில் நேற்று பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது. அதன்படி, கிருஷ்ணகிரி வட்டத்தில் பந்தாரப்பள்ளி, பர்கூரில் குண்டேப்பள்ளி, போச்சம்பள்ளியில் தொப்பிடிகுப்பம், ஊத்தங்கரையில் வேலம்பட்டி, ஓசூரில் கொத்துார், சூளகிரியில் உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டையில் சாரண்டப்பள்ளி, அஞ்செட்டி வட்டத்தில் மிலித்திக்கி ஆகிய, 8 கிராமங்களில் அந்தந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், கிருஷ்ணகிரி அடுத்த பந்தாரப்பள்ளியில் நடந்த முகாமிற்கு, குடிமை பொருள் தனி தாசில்தார் வடிவேல் தலைமை வகித்தார். சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின், மாநில பொதுச் செயலாளர் சந்திரமோகன் முன்னிலை வகித்தார். முகாமில், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்குதல், ரேஷன் கடை குறைகள் குறித்து, விண்ணப்பங்கள் பெற்ற, தனி தாசில்தார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதில், ஆர்.ஐ.,க்கள் சின்னசாமி, சதீஷ்குமார், ரேஷன்கடை விற்பனையாளர் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

