/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும்அமைச்சர்களிடம் ஹோஸ்டியா சங்கம் மனு

ADDED : பிப் 23, 2025 01:26 AM
ஓசூரில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும்அமைச்சர்களிடம் ஹோஸ்டியா சங்கம் மனு
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூருக்கு வருகை தந்த தொழில்துறை அமைச்சர் ராஜா, உணவு பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி, தொழில்துறை செயலாளர் அருண்ராய், சிப்காட் நிர்வாக இயக்குனர் செந்தில்ராஜ் ஆகியோரிடம், ஹோஸ்டியா சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் வடிவேல் மற்றும் நிர்வாகிகள் நேற்று கோரிக்கை மனுவை வழங்கினர்.
அதில், அவர்கள் கூறியிருப்பதாவது: ஓசூருக்கு விரைவில் வர்த்தக மையம் அமைக்க வேண்டும். சூளகிரி சிப்காட்டில் அடிப்படை வசதிகளை விரைவாக முடிக்க வேண்டும். ஓசூர் - பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் இணைப்பு மற்றும் விமான நிலையம் போன்ற பணிகளை விரைந்து துவங்க வேண்டும். ராஜேஸ்வரி லே அவுட், காமராஜ் நகர் பகுதிகளுக்கு அடிப்படை வசதிகள் செய்ய, சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும். ஓசூருக்கு பல்வேறு பெரிய நிறுவனங்கள் வர, நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி
களை ஏற்படுத்த வேண்டும். தொழிலாளர்களுக்கான மலிவான வீடுகள் கட்ட வேண்டும். டிரேடு லைசென்ஸ் கட்டணங்களை சீரான வெளிப்படைத்தன்மையோடு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் ராஜா, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் ஓசூர் பிரகாஷ், பர்கூர் மதியழகன், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உட்பட பலர் உடனிருந்தனர்.