/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி குழுமத்தில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
/
சரஸ்வதி வித்யாலயா பள்ளி குழுமத்தில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
சரஸ்வதி வித்யாலயா பள்ளி குழுமத்தில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
சரஸ்வதி வித்யாலயா பள்ளி குழுமத்தில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
ADDED : மார் 09, 2025 01:56 AM
சரஸ்வதி வித்யாலயா பள்ளி குழுமத்தில்உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி அடுத்த குந்தாரப்பள்ளியிலுள்ள, ஸ்ரீ சரஸ்வதி வித்யாலயா பள்ளி குழுமங்களின் சார்பில், நேற்று உலக மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி நிறுவனர் டாக்டர் அன்பரசன் தலைமை வகித்து, பள்ளியில் பணியாற்றி வரும் பெண் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் கடின உழைப்பை பாராட்டினார். பள்ளி தாளாளர் சங்கீதா அன்பரசன், பெண்களின் வலிமை மற்றும்
உறுதிப்பாட்டை பற்றியும், பெண்கள் தங்கள் துறைகளில் சாதனைகளை படைத்து, தடைகளை முறியடிக்க வேண்டும் என ஊக்குவித்தார். பள்ளி மேலாண்மை அலுவலர் பூபேஷ், சி.பி.எஸ்.சி., பள்ளியின் முதல்வர் ஷர்மிளா மற்றும் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் ரமணன் ஆகியோர், பெண் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர். தொடர்ந்து, பெண் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.