/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பூர்வீக சொத்தை பிரித்து தராததால் விரக்திகலெக்டர் ஆபீசில் டெய்லர் தீக்குளிக்க முயற்சி

ADDED : மார் 19, 2025 01:35 AM
பூர்வீக சொத்தை பிரித்து தராததால் விரக்திகலெக்டர் ஆபீசில் டெய்லர் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, ஆலம்பாடியை சேர்ந்தவர் கண்ணன், 39. டெய்லர். இவர் மனைவி கோகிலா. இவர்களுக்கு, 2 மகள், மகன் உள்ளனர். இவரது குடும்பத்தினருக்கு அதே பகுதியில் பூர்வீக நிலம் உள்ளது. இதில், கண்ணனின் தாத்தா, தந்தை ஆகியோர் உயிரிழந்த நிலையில், தனக்கு சேரவேண்டிய பூர்வீக சொத்தை தன் உறவினர்கள் தராமல் ஏமாற்றி வருவதாக கூறி, அரூர் போலீசில் கண்ணன் புகார் அளித்தார். அதன் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
அந்த விரக்தியில், தனக்கு பூர்வீக சொத்தை பிரித்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று காலை, தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில், தன் உடல் மீது பெட்ரோல் ஊற்றி கொண்டு, கண்ணன் தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவரிடமிருந்த பெட்ரோல் கேனை பறித்து, அவர் தீக்குளிப்பதை தடுத்தனர். மேலும், கலெக்டர் அலுவலக வளாகத்தின் வெளியே தண்ணீர் இல்லாததால், அலுவலகம் உள்ளேயிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவர் மீது ஊற்றி காப்பாற்றினர்.
இதையடுத்து, கண்ணனிடம் விசாரணை செய்த போலீசார், பின்னர் தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அவரை அழைத்துச் சென்றனர்.