/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரூ.1.08 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்
/
ரூ.1.08 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் துவக்கம்
ADDED : செப் 18, 2024 07:37 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், தளி ஒன்றியம், உரிகம் கிராமத்தில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 30.10 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய பஞ்., அலுவலகம் கட்டும் பணி, 16.55 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டடம், 11.30 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை பணி நடக்கிறது. மேலும், கோவள்ளி, வெங்கலன் தொட்டி கிராமங்களில் தலா, 5.15 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலைகள், முத்திகரை கிராமத்தில், 6.15 லட்சம் ரூபாயில் சிமென்ட் சாலை, உரிகம் கிராமத்தில், 8 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை, கோவள்ளி, உடுபராணி கிராமத்தில் தலா, 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது.
8 லட்சம் ரூபாய் மதிப்பில் பயணிகள் நிழற்கூடம், கோட்டையூர் பஞ், உட்பட்ட பெரிய மல்லஹள்ளி, சின்ன மல்லஹள்ளி, கல்வீரன்தொட்டி கிராமங்களில் தலா, 3.20 லட்சம் ரூபாய் மதிப்பில் சிமென்ட் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. இவற்றை தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார். மாவட்ட கவுன்சிலர் பழனி, பி.டி.ஓ.,க்கள் ராஜேஷ், சீனிவாசமூர்த்தி, உதவி பொறியாளர் வெங்கடேஷ், பஞ்., தலைவர் மாதேவப்பா உட்பட பலர் பங்கேற்றனர்.