/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பூதிமுட்லு கிராமத்தில் பிரம்மோற்சவம் கோதண்டராமசுவாமிக்கு திருக்கல்யாணம்

ADDED : மார் 24, 2024 01:49 AM
கிருஷ்ணகிரி, பூதிமுட்லு கிராமத்தில், பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு, கோதண்டராமசுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அடுத்த பூதிமுட்லு கிராமத்திலுள்ள கோதண்டராம
சுவாமி கோவிலில், பிரம்மோற்சவ திருவிழா கடந்த, 19ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒரு வாரமாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, சிறப்பு பூஜை நடந்து வந்தது. நேற்று சீதா ராமர் திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு, காலை சிறப்பு அபிஷேகம், ஆராதனை, பூஜை மற்றும் பரிகாரம் செய்யப்பட்டு, உற்சவர் சீதாதேவிக்கும், கோதண்டராமருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.
நிகழ்ச்சியில், வேப்பனஹள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருந்தும், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும், 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்திருந்தனர். பின்னர், அலங்கரிக்கப்பட்ட சீதாதேவி சமேத கோதண்டாராமர் நகர் வலம் கொண்டு செல்லப்பட்டது. நாளை (மார்ச் 25) கோதண்டராம ரத உற்சவம், நாளை மறுநாள் ஆஞ்சநேயர் ரத உற்சவம், பல்லக்கு உற்சவம்
ஆகியவை நடக்க உள்ளன.