/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புகையிலை, மதுபானம் கடத்தல் திருச்சி கார் டிரைவர் கைது
/
புகையிலை, மதுபானம் கடத்தல் திருச்சி கார் டிரைவர் கைது
புகையிலை, மதுபானம் கடத்தல் திருச்சி கார் டிரைவர் கைது
புகையிலை, மதுபானம் கடத்தல் திருச்சி கார் டிரைவர் கைது
ADDED : பிப் 08, 2025 12:44 AM
புகையிலை, மதுபானம் கடத்தல் திருச்சி கார் டிரைவர் கைது
ஓசூர்: தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடி சோதனைச்சாவடியில் பணியில் இருந்த சிப்காட் ஸ்டேஷன் எஸ்.ஐ., மாதப்பன் மற்றும் போலீசார், நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு, பெங்களூருவில் இருந்து ஓசூர் நோக்கி வந்த ஐ-10 காரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, காரில் தடை செய்யப் பட்ட புகையிலை பொருட்கள், கர்நாடகா மாநில மதுபானங்களை கடத்தி செல்வது தெரிந்தது.
இதையடுத்து, கார் டிரைவரான திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அடுத்த பெட்டவாய்த்தலை அருகே தேவஸ்தானம் பகுதியை சேர்ந்த வேல்முருகன், 37, என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு புகையிலை பொருட்கள் மற்றும் மதுபானத்தை கடத்தி செல்வது தெரிந்தது. 1.35 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 314 கிலோ புகையிலை பொருட்கள், 3,120 ரூபாய் மதிப்புள்ள, 48 பாக்கெட் கர்நாடகா மதுபானங்கள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.