/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிறுமியின் கழுத்தை அறுத்த மாணவன்சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு

ADDED : பிப் 26, 2025 01:02 AM
சிறுமியின் கழுத்தை அறுத்த மாணவன்சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைப்பு
கரூர்:கடவூர் அருகே, பள்ளி சிறுமியின் கழுத்தை அறுத்த மாணவர், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் அருகே அண்ணாவி பூசாரிப்பட்டி பகுதியை சேர்ந்த, 15 வயதுடைய சிறுமி. அரசு மாதிரி பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி., படித்து வருகிறார். இவர் கடந்த, 23 இரவு, சாலையூர் முடக்குசாலை பகுதிக்கு இயற்கை உபாதைக்காக, சென்ற போது அதே பகுதியை சேர்ந்த, 17 வயதுடைய பிளஸ் 2 மாணவன், முன் விரோதம் காரணமாக கத்தியால் கழுத்தை அறுத்து விட்டு, தப்பி ஓடி விட்டார். அப்போது, சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் சிறுமியை திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதையடுத்து, சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின்பேரில், பாலவிடுதி போலீசார் சிறுவனை கைது செய்து, நேற்று அதிகாலை கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி வரும் மார்ச், 10 வரை திருச்சியில் உள்ள, சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் அடைத்தனர்.