/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை; கலெக்டர் தினேஷ்குமார் உறுதி
/
விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை; கலெக்டர் தினேஷ்குமார் உறுதி
விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை; கலெக்டர் தினேஷ்குமார் உறுதி
விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை; கலெக்டர் தினேஷ்குமார் உறுதி
ADDED : மார் 01, 2025 01:49 AM
விடுபட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைதொகை; கலெக்டர் தினேஷ்குமார் உறுதி
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், உத்தனப்பள்ளி அருகே அளேகோட்டா கிராமத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. அனைத்துத்துறை சார்பில், 208 பயனாளிகளுக்கு, 73.55 லட்சம் ரூபாய் மதிப்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்குமார் வழங்கி பேசியதாவது:
கொரோனா கால கட்டத்தில், 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி கொண்ட கிராமமாக பாத்தக்கோட்டா திகழ்ந்தது. குழந்தை திருமணங்களை மலை கிராமங்களில் நடத்துகின்றனர். அதை பொதுமக்கள் ஊக்குவிக்க கூடாது. பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது, ஒரு சமுதாயத்தையே படிக்க வைப்பதற்கு சமம். கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என கண்டுபிடித்து கூறிய, ஸ்கேன் சென்டருக்கு சீல் வைக்கப்பட்டு, தொடர்புடைய நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு குடும்பத்தில் ஒரே ஒரு குழந்தை இருந்து, அக்குழந்தை ராணுவத்தில் இருந்தால், 20,000 ரூபாய் மற்றும் ஒரு வெள்ளிப்
பதக்கம், இரு குழந்தைகள் இருந்து, இரு குழந்தைகளும் ராணுவத்தில் இருந்தால், 25,000 ரூபாய் மற்றும் வெள்ளிப்பதக்கம் வழங்கப்படும். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறாத நபர்கள் விண்ணப்பிக்கலாம். மிக விரைவில் விடுபட்ட பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு பேசினார்.அட்டகுறுக்கி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு சென்ற கலெக்டர் தினேஷ்குமார், மாணவ, மாணவியரின் கற்றல் திறனை ஆய்வு செய்தார். ஓசூர் சப்-கலெக்டர் பிரியங்கா, சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் பன்னீர்செல்வம், ஆதிதிராவிடர் நல அலுவலர் ரமேஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.