/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நீரில் மூழ்கி மாணவன், ஹெச்.எம்., பலிநிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,
/
நீரில் மூழ்கி மாணவன், ஹெச்.எம்., பலிநிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,
நீரில் மூழ்கி மாணவன், ஹெச்.எம்., பலிநிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,
நீரில் மூழ்கி மாணவன், ஹெச்.எம்., பலிநிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,
ADDED : மார் 08, 2025 02:37 AM
நீரில் மூழ்கி மாணவன், ஹெச்.எம்., பலிநிவாரணம் வழங்கிய எம்.எல்.ஏ.,
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே எழுவப்பள்ளி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இங்கு தலைமையாசிரியராக கவுரி சங்கர் ராஜூ,53, பணியாற்றி வந்தார். கடந்த, 5 மதியம், 1:00 மணிக்கு மேல், பள்ளியில் படித்த மூன்றாம் வகுப்பு மாணவன் நித்தீன், 8, பள்ளியின் பின்புறம் விவசாய நிலத்தில் இருந்த தண்ணீர் சேமித்து வைக்கும் குட்டையில் விழுந்து உயிரிழந்தார். மாணவனை காப்பாற்ற முயன்ற தலைமையாசிரியர் கவுரி சங்கர் ராஜூவும், நீரில் மூழ்கி பலியானார். உயிரிழந்த மாணவன் மற்றும் தலைமையாசிரியர் குடும்பத்திற்கு தலா, 3 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
மாணவன் மற்றும் தலைமையாசிரியர் குடும்பத்தினரை நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய ஓசூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், அரசு அறிவித்த, 3 லட்சம் நிவாரண தொகையை, சப்-கலெக்டர் பிரியங்கா முன்னிலையில் வழங்கினார். ஓசூர் தாசில்தார்
சின்னசாமி உட்பட பலர் உடன் இருந்தனர்.