/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தெற்காசியாவில் கற்றலில் சிறப்பான செயல்பாடுஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தேர்வு

ADDED : ஏப் 03, 2025 02:03 AM
தெற்காசியாவில் கற்றலில் சிறப்பான செயல்பாடுஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி தேர்வு
ஊத்தங்கரை:கேம்பிரிட்ஜ், தெற்காசிய பள்ளிகள் மாநாடு, மாறிவரும் உலகில் முன்னேற கற்பவர்களை தயார்படுத்துதல் என்ற நோக்கத்தோடு டில்லியில் மார்ச், -27, 28ல் நடந்தது. இதில், இந்தியா, நேபாளம். இலங்கை, பூட்டான், பங்களாதேஷ் மற்றும் மாலத்தீவுகளை சேர்ந்த, 1,000 கல்வியாளர்கள், பள்ளிகள் மற்றும் சிந்தனை தலைவர்கள் பங்கேற்றனர்.
கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் பேராசிரியர் மார்க் லிஸ்டர் பாட்டம், கேம்பிரிட்ஜ் சர்வதேச கல்வி ஆராய்ச்சி தலைவர் சாரா ஹியூஸ், இந்திய கல்விக்கான கூகுள் தலைவர் சஞ்சய் ஜெயின் சர்வதேச கல்வியில் டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் இயக்குனர் லிஸ்ட்சே நாடின், கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக கல்வியியல் துறை பேராசிரியர் சூ பிரிண்ட்லி ஆகியோர் கொண்ட குழு, தெற்காசியாவில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளில், அப்பள்ளியின் கல்வித்திறமைகளை அங்கீகரிக்கும் வகையில், கேம்பிரிட்ஜ் பள்ளி அங்கீகார விருதை வழங்கியது.
அதில், தமிழகத்தை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அதியமான் பப்ளிக் பள்ளி ஒருங்கிணைந்த கற்றல் விருதை பெற்றது. கேம்பிரிட்ஜ் பல்கலைக்
கழக கல்வியியல் துறைத்தலைவர் பேராசிரியர் மார்க் லிஸ்டர் பாட்டம் மற்றும் தெற்கு ஆசியாவின் சர்வதேச கல்வியின் மூத்த துறைத்தலைவர் ஆசிஷ் அரோரா ஆகியோர், ஒருங்கிணைந்த கற்றல் பள்ளிக்கான விருதை, அதியமான் பப்ளிக் பள்ளி நிறுவனர் முனைவர். சீனி திருமால் முருகனிடம் வழங்கி
பாராட்டினர்.