/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: பாதுகாப்பு பணியில் போலீசார்
/
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: பாதுகாப்பு பணியில் போலீசார்
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: பாதுகாப்பு பணியில் போலீசார்
சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: பாதுகாப்பு பணியில் போலீசார்
ADDED : செப் 02, 2024 02:34 AM
தொப்பூர்: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் வழியாக செல்லும், தேசிய நெடுஞ்சாலை என்.எச்.,44 காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரிக்கு செல்லும் முக்கியமான சாலையாக உள்ளது.
இச்சாலையின் வழி-யாக, நாளொன்றுக்கு ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள், பாளையம்புதுார் சுங்கச்சாவடியை கடந்து செல்கின்றன. இதில், செப்., 1 முதல் பாளையம் சுங்கச்சாவடியில், கட்டணம் உயர்த்த-படும் என அறிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி
முதல், புதிய கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், கார் மற்றும் கனரக வாகனங்களுக்கு ஒரு முறை சென்று வர, கட்டண உயர்வு அறிவிக்கப்படவில்லை. கார்களுக்கு கடந்-தாண்டு விதிக்கப்பட்ட கட்டணமான, ஒரு முறை கடந்து செல்ல, 120 ரூபாய் என்பது தொடர்கிறது.
இதில், 24 மணி நேரத்தில் பல-முறை பயணிக்க, 180ல் இருந்து, 185 என, 5 ரூபாய் உயர்த்துள்-ளது. இலகுரக வணிக மோட்டார் வாகனம், 215, கனரக வாகனங்-களுக்கு, 425, மற்றும் பல அச்சு பொருந்திய வாகனங்களுக்கு, 685
ரூபாய் என, பழைய கட்டணம் தொடர்கிறது. இதில், பல அச்சு பொருந்திய வாகனம் பலமுறை பயணிக்கும் போது, 1,025ல் இருந்து, 1,030 என, 5 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நேற்று முதல், பாளையம்
சுங்கச்சாவடியில், பல முறை பயணிக்கும் கார் மற்றும் பல அச்சு வாகனத்திற்கு மட்டும், 5 ரூபாய் கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நி-லையில், சுங்க கட்டண உயர்வின் காரணமாக, பாதுகாப்பு கருதி, தொப்பூர்
இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில், 30க்கும் மேற்பட்ட போலீசார், பாளையம் சுங்கச்சாவடி பகுதியில் பாது-காப்பு பணியில் ஈடுபட்டனர்.