/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறையினர் நடத்திய பைக் பேரணி
/
துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறையினர் நடத்திய பைக் பேரணி
துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறையினர் நடத்திய பைக் பேரணி
துப்பாக்கிகளை ஒப்படைக்க வலியுறுத்தி வனத்துறையினர் நடத்திய பைக் பேரணி
ADDED : ஜூன் 19, 2024 10:32 AM
ஓசூர்: ஓசூரில், உரிமம் இல்லாமல் பயன்படுத்தும் நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்க
வலியுறுத்தி நேற்று பைக் பேரணி நடந்தது.
ஓசூர் வனக்கோட்டத்தில், உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கிகளை பயன்படுத்தி வருபவர்கள் அடுத்த மாதம், 17 ம் தேதிக்குள் வனத்துறை வசம் ஒப்படைக்க வேண்டும். அல்லது ஊர் முக்கியஸ்தர்கள் அல்லது போலீசாரிடம் ஒப்படைக்கலாம். அவ்வாறு ஒப்படைக்கும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படாது. அவ்வாறு ஒப்படைக்காத பட்சத்தில் அடுத்த மாதம், 18 முதல், பயிற்சி அளிக்கப்பட்ட மோப்ப நாய்கள் மூலம், மலைகிராமங்களில் ஆய்வு நடத்தி துப்பாக்கிகளை பறிமுதல் செய்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதை பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில், ஓசூர் வனக்கோட்டம் முழுவதும் விழிப்புணர்வு பேரணி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்யும் பணி நேற்று துவங்கியது. ஓசூர் மத்திகிரி மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து, நேற்று காலை விழிப்புணர்வு பைக் பேரணி நடந்தது. ஓசூர் வனக்கோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி, கொடியசைத்து துவக்கி வைத்தார். ஓசூர் நகரின் முக்கிய சாலைகளில் வனத்துறையினர் பேரணியாக சென்றனர். உதவி வனப்பாதுகாவலர்கள் ராஜமாரியப்பன், கிரீஸ் ஹரிபாவ் பால்வே (பயிற்சி), ஓசூர் வனச்சரகர் பார்த்தசாரதி உட்பட பலர் பங்கேற்றனர்.