/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த முயற்சிசூளகிரியில் விவசாயிகள் தர்ணா போராட்டம்

ADDED : ஜன 12, 2025 01:06 AM
சிப்காட்டிற்கு நிலம் கையகப்படுத்த முயற்சிசூளகிரியில் விவசாயிகள் தர்ணா போராட்டம்
ஓசூர்,:சூளகிரி அருகே, நல்லகானகொத்தப்பள்ளி, அட்டகுறுக்கி, தோரிப்பள்ளி, மருதாண்டப்பள்ளி ஆகிய கிராமங்களை சுற்றி, சிப்காட் - 3 மற்றும் சிப்காட் - 4 ஆகிய தொழில்பேட்டைகளை அமைக்க, விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தி வருகிறது. ஏக்கருக்கு இழப்பீடாக விவசாயிகளுக்கு, 41 லட்சம் ரூபாய் வரை வழங்கப்படுகிறது. சிப்காட், 4 தொழில்பேட்டைக்காக, நல்லகான
கொத்தப்பள்ளி கிராமத்தை சுற்றியுள்ள, 700 ஏக்கருக்கு மேலான நிலங்களை கையகப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, சூளகிரியில், சிப்காட் நிலம் எடுப்பு தனி தாசில்தார் அலுவலகம் அமைத்து பணிகள் நடந்து வருகின்றன. சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
சிப்காட் - 4 அமைக்க தேர்வு செய்துள்ள நிலங்களில் பெரும்பாலானவை, கெலவரப்பள்ளி அணை பாசன கால்வாய் மூலம், சிறு, குறு விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களாகும். அந்த நிலத்தை அரசு கையகப்படுத்த முயற்சிக்கிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், நேற்று முன்தினம் சூளகிரி சிப்காட் நில எடுப்பு அலுவலகத்திற்கு விவசாயிகளை அழைத்து, நில எடுப்பு, தனி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிதேவி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பாசன கால்வாய் நீரில், சாகுபடி செய்து வரும் விவசாய நிலங்களை கையகப்படுத்தக் கூடாது எனக்கூறி, அலுவலகம் முன் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தனி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிதேவி பேச்சுவார்த்தை நடத்தினார். விவசாய நிலங்களை கையகப்படுத்தினால், மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் எனக்கூறி,
விவசாயிகள் கலைந்து சென்றனர்.