/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
காணும் பொங்கலை கொண்டாடசுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
/
காணும் பொங்கலை கொண்டாடசுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை கொண்டாடசுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
காணும் பொங்கலை கொண்டாடசுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
ADDED : ஜன 17, 2025 12:58 AM
காணும் பொங்கலை கொண்டாடசுற்றுலா தலங்களில் குவிந்த மக்கள்
கிருஷ்ணகிரி,: காணும் பொங்கலையொட்டி, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். பெரியவர்கள் கே.ஆர்.பி., அணை பூங்காவில் அமர்ந்தும், சிறுவர்கள் பூங்காவிலுள்ள விளையாட்டு உபகரணங்களில்
விளையாடியும் மகிழ்ந்தனர்.கே.ஆர்.பி., அணைக்கு, காணும் பொங்கலில், 5,000க்கும் மேற்பட்டோர் வருவது வழக்கம். ஆனால், பராமரிப்பில்லா அணை பூங்கா, பழுதான நீர் ஊற்றுகள், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான உணவு கிடைக்காதது போன்றவையால், தற்போது சுற்றுலா பயணிகளின் வருகை பாதியாக குறைந்துள்ளது.
நேற்று சுற்றுலா பயணிகள் சிலர், அணை பகுதியில் உணவுகளை சமைத்தும், சிலர் தாங்கள் கொண்டு வந்த உணவுகளையும் உண்டனர். அணை பின்பகுதியிலுள்ள மீன் வறுவல் கடைகளில் அதிகளவில் மக்கள் குவிந்தனர். இதேபோல், கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி சிறுவர் பூங்காவிலும், ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.
இறைச்சி கடைகளில் கூட்டம்காணும் பொங்கலையொட்டி கிருஷ்ணகிரியிலுள்ள ஆடு அடிக்கும் தொட்டி மற்றும் நகர்ப்புறங்களிலுள்ள இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதியது. ஆட்டு இறைச்சி ஒரு கிலோ, 700 முதல், 750 ரூபாய் வரையிலும், கறிக்கோழி, 180 முதல், 210 ரூபாய் வரையிலும் நாட்டுக்கோழி, 400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.
அதேபோல பழையபேட்டை மீன் மார்க்கெட், ராயக்கோட்டை சாலையிலுள்ள மீன் கடைகளில் கூட்டம் அலைமோதியது. வஞ்சிரம் மீன் கிலோ, 1,300 ரூபாய்க்கு விற்றது.மக்கள் விலையை பொருட்படுத்தாமல், காத்திருந்து வாங்கிச் சென்றனர்.