/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த சின்ன ஏரி
/
கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த சின்ன ஏரி
ADDED : ஜன 31, 2025 01:10 AM
கழிவுநீர் கலப்பதால் மாசடைந்த சின்ன ஏரி
கிருஷ்ணகிரி: சின்ன ஏரியில் கழிவுநீர் நேரடியாக கலப்பதால், தண்ணீர் முற்றிலும் மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி
யுள்ளனர். கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், 16 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சின்ன ஏரிக்கு, கிருஷ்ணகிரி மலையில் இருந்து மழைக்காலங்களில் தண்ணீர் வரத்து இருக்கும். ஏரியில் தேங்கும் நீர், பழையபேட்டை பகுதியிலுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் ஆழ்துளை கிணறுகளுக்கும், சோமேஸ்வரர் கோவில் எதிரிலுள்ள பெரிய கிணறு மற்றும் திருநீலகண்டர் தெருவிலுள்ள கிணறுகளுக்கும் நீர் ஆதாரமாக உள்ளது. தற்போது, சின்னஏரியில் சாக்கடைக் கழிவுநீர் நேரடியாக கலப்பதால், கடும் துார்நாற்றம் வீசுவதோடு, தண்ணீர் முற்றிலும் மாசடைந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், 'சின்ன ஏரியில் பிளாஸ்டிக் குப்பை, இறைச்சி கழிவுகள் வீசப்படுகிறது. ஏரியை சுற்றிலும் கட்டட கழிவுகளும் கொட்டப்படுகிறது. இதனால் நீர்நிலையும், சுற்றுப்புற துாய்மையும் பாதிக்கப்பட்டு வருகிறது. சின்னஏரியை சுற்றிலும் உள்ள குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக இந்த ஏரியில் கலக்கிறது. பஸ் ஸ்டாண்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரும் நேரடியாக ஏரியில் விடுவதால், கடும் துர்நாற்றம் வீசுவதோடு, ஏரி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. எனவே, ஏரியில் கழிவுநீர் கலப்பதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும்' என்றனர்.