/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கோவில் கும்பாபிேஷக விழா பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
/
கோவில் கும்பாபிேஷக விழா பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கோவில் கும்பாபிேஷக விழா பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கோவில் கும்பாபிேஷக விழா பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
ADDED : பிப் 08, 2025 12:42 AM
கோவில் கும்பாபிேஷக விழா பெண்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
கிருஷ்ணகிரி,:கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த குண்டலப்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள, சக்தி விநாயகர், சாரதா அம்பிகா சமேத சர்வேஸ்வர சுவாமி, மாரியம்மன், காளியம்மன், ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிேஷக விழா கடந்த, 28ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
நேற்று காலை கணபதி பூஜை, கங்கா பூஜை, தென்பெண்ணை ஆற்றில் இருந்து கங்கை பூஜை செய்து, 1,000க்கும் மேற்பட்ட பெண்கள் தீர்த்தக் குடங்களை கோவிலுக்கு கொண்டு வந்தனர். அங்கு சுவாமிக்கு அபிேஷகம், ஆராதனை நடந்தது. நாளை (பிப்., 9) காலை, 10:15 மணிக்கு, சக்தி விநாயகர், சிவன், மாரியம்மன், காளியம்மன், ஆஞ்சநேயர், நவக்கிரகம், விமானம், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.