/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
/
ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 19, 2025 01:34 AM
ஆசிரியர்கள் கறுப்பு பேட்ஜ்அணிந்து ஆர்ப்பாட்டம்
தர்மபுரி:சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில், மாவட்டம் முழுவதும் ஆசிரியர்கள் பள்ளிகளில் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில்
ஈடுபட்டனர்.தர்மபுரி மாவட்ட சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில், நேற்று மாவட்டம் முழுவதும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அந்தந்த பள்ளி வளாகங்களில் உணவு இடைவேளையின் போது, கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில், மாநில ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகர் தலைமையில், மாரண்டஹள்ளி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியிலும், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி தலைமையில் ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், பழைய ஓய்வூதியம், புதிய ஓய்வூதியம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியம் திட்டங்களை பற்றி ஆராய குழு அமைத்ததை கண்டித்தும், அந்த குழுவை கலைக்க கோரியும், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். இதேபோல், மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்க நிர்வாகிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.