/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிவிவசாயிகளுக்கு கோவையில் பயிற்சி
/
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிவிவசாயிகளுக்கு கோவையில் பயிற்சி
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிவிவசாயிகளுக்கு கோவையில் பயிற்சி
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிவிவசாயிகளுக்கு கோவையில் பயிற்சி
ADDED : மார் 07, 2025 02:19 AM
வேளாண் பொருட்கள் ஏற்றுமதிவிவசாயிகளுக்கு கோவையில் பயிற்சி
கிருஷ்ணகிரி,:கோவையில், வேளாண் விவசாய பொருட்கள் ஏற்றுமதி குறித்து, பர்கூர் வட்டார விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இது குறித்து, பர்கூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சிவசங்கரி கூறியதாவது: பர்கூர் வட்டார விவசாயிகளுக்கு, அட்மா திட்டத்தின் மூலம், விவசாய பொருட்கள் ஏற்றுமதி குறித்து, கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பயிற்சி வழங்கப்பட்டது. பல்கலைக்கழக உதவி பேராசிரியர் கதிரவன் பயிற்சியை துவக்கி வைத்து பேசுகையில், தொழில்முனைவு மேம்பாட்டு மையத்தின் முக்கிய பணி, தொழில் முனைவோரை வளர்ப்பது, மேம்படுத்துவது, திறன்களை மேம்படுத்தி, சுற்றுச்சூழலை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். படித்த இளைஞர்களை தொழில்முனைவோராக வளர்க்கும் வகையில், திட்டமிடுதல், துவங்குதல் மற்றும் உற்பத்தி அல்லது சேவை நிறுவனத்தை வெற்றிகரமாக துவங்குதல் ஆகியவை குறித்து விளக்கினார். வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் பாலாஜி பேசுகையில், உலகின் மிகப்பெரிய விவசாயம் மற்றும் உணவு பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதன்மையாக உள்ளது என்றார். வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் கலையரசி, எண்ணெய் வித்து பயிர்களை தாக்கும் நோய்கள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கினார். பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் அன்பரசு மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சண்முகம், கிரிஜா ஆகியோர் செய்திருந்தனர். இதில் பர்கூர் வட்டாரத்தை சேர்ந்த, 40 விவசாயிகள் பங்கேற்றனர்.இவ்வாறு, அவர் கூறினார்.