/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநில தொழிலாள
/
ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநில தொழிலாள
ADDED : மார் 15, 2025 02:04 AM
ஹோலி பண்டிகையை கொண்டாடிய வடமாநில தொழிலாளர்கள்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கிருஷ்ணகிரி, ஓசூர், சூளகிரி, மத்துார், போச்சம்பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி
களில், வட மாநிலத்தை சேர்ந்த மக்கள், குடும்பத்துடன் தங்கி பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். கிருஷ்ணகிரி மற்றும் ஓசூரில், பிளைவுட் கடைகள், பேன்சி மற்றும் எழுது பொருட்களை மொத்த வியாபாரமும் செய்து வருகின்றனர்.
நேற்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு, தொழிலாளர்கள் மற்றும் உரிமையாளர்கள் ஒன்றிணைந்து, வண்ண பொடிகளை ஒருவர் மீது ஒருவர் துாவியும், வண்ண பொடிகள் கலந்த தண்ணீரை மற்றவர்கள் மீது அடித்தும், ஹோலி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
மேலும் வீடுகளில் இனிப்பு வகைகளை சமைத்து, மற்றவர்களுக்கு கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதே போல், லாரிகளில் சரக்குகளை ஏற்றி வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஓட்டுனர்கள், இங்குள்ள வட மாநில இளைஞர்களுடன் சேர்ந்து வண்ணப்பொடிகளை துாவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். ஹோலி பண்டிகையை முன்னிட்டு, கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.