/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேன்கனிக்கோட்டையில் கவி ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்
/
தேன்கனிக்கோட்டையில் கவி ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்
தேன்கனிக்கோட்டையில் கவி ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்
தேன்கனிக்கோட்டையில் கவி ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்
ADDED : மார் 15, 2025 02:05 AM
தேன்கனிக்கோட்டையில் கவி ஸ்ரீலட்சுமிநரசிம்ம சுவாமி கோவில் தேரோட்டம்
தேன்கனிக்கோட்டை:கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் உள்ள கவி ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் தேர்த்திருவிழா துவங்கி நடந்து வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. நேற்று மதியம் அலங்கரிக்கப்பட்ட தேரில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத லட்சுமி நரசிம்ம சுவாமி உற்சவ மூர்த்தி அமர வைக்கப்பட்டு தேரோட்டம் துவங்கியது.
தேன்கனிக்கோட்டை டவுன் பஞ்., தலைவர் சீனிவாசன், முன்னாள் தலைவர் நாகேஷ் மற்றும் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். முக்கிய வீதியில் சென்ற தேர் மீண்டும் நிலையை அடைந்தது. தேன்கனிக்கோட்டை, தளி, அஞ்செட்டி, கெலமங்கலம், ஓசூர் மட்டுமின்றி, கர்நாடகா, ஆந்திர மாநில பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு, 9:00 மணிக்கு பஜனை நிகழ்ச்சி நடந்தது. விழாவில் இன்று இரவு முத்து பல்லக்கு நடக்கிறது.