/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
டாக்டர் வீட்டில் திருடிய தந்தை, மகன் கைது
/
டாக்டர் வீட்டில் திருடிய தந்தை, மகன் கைது
ADDED : மார் 15, 2025 02:21 AM
டாக்டர் வீட்டில் திருடிய தந்தை, மகன் கைது
ஓசூர்:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வசந்த் நகரை சேர்ந்தவர் பரத், 35. பல் டாக்டரான இவர், பாகலுார் சாலையில் கிளினிக் நடத்தி வருகிறார். கடந்த இரு வாரங்களுக்கு முன், டாக்டர் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள், பீரோவை உடைத்து, 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 10 பவுன் நகையை திருடி சென்றனர். ஹட்கோ இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சையத் சுல்தான் பாஷா மற்றும் போலீசார் விசாரித்தனர். இதில், திருப்பதியை சேர்ந்த கிருஷ்ணன், 50, அவரது மகன் சந்தோஷ், 24, ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. திருப்பதி சென்ற போலீசார், தந்தை, மகன் இருவரையும் நேற்று முன்தினம் கைது செய்து, நகையை பறிமுதல் செய்தனர். கிருஷ்ணன் மீது தமிழகம், கர்நாடகா, ஆந்திராவில், 25க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளதாக, போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.