/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள்தெருவில் துாங்கும் குடியிருப்புவாசிகள்

ADDED : மார் 16, 2025 02:14 AM
இடிந்து விழும் அரசு தொகுப்பு வீடுகள்தெருவில் துாங்கும் குடியிருப்புவாசிகள்
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே, தொகுப்பு வீடுகளில் கூரைகள் இடிந்து விழுந்த நிலையில், வீடுகளில் வசிக்க குடியிருப்புவாசிகள் அச்சமடைந்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே கட்டுனிசே கிராமத்தில், 1994ல், 21 ஏழை, குடும்பங்களுக்கு தமிழக அரசு சார்பில் தொகுப்பு வீடு கட்டி தரப்பட்டது. தற்போது, 30 ஆண்டுகளை கடந்து விட்டதால், மேற்கூரை அவ்வப்போது பெயர்ந்து விழுகிறது. வீடுகளை பராமரிக்க மாவட்ட நிர்வாகம் முயற்சிக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
நேற்று தொகுப்பு வீட்டில் வசித்து வந்த முனிரத்தினம்மா, 47, உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து விழுந்தது. அச்சத்தில் குழந்தைகளுடன் அலறியடித்து வெளியே ஓடினார். இதேபோல் வெங்கட
லட்சுமி, 50, என்பவரது வீட்டின் கூரையும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாருமில்லை. இதனால் இரு குடும்பத்தினரும், தொகுப்பு வீடுகளில் தங்க அச்சமடைந்து, வீட்டுக்கு வெளியே தெருவில் படுத்து துாங்குகின்றனர். பல குடியிருப்புகளில் கூரையின் கான்கிரீட் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. பெரும்பாலான தொகுப்பு வீடுகள் இந்த நிலையில்தான் உள்ளன. மழைக்காலங்களில் ஒழுகுகின்றன. வீடுகள் இடிந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், தளி பி.டி.ஓ.,க்கள் ஆய்வு செய்து, தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை
எழுந்துள்ளது.