/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'மக்களை தேடி மருத்துவம்' திட்ட பயனைகூடுதலாக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்

ADDED : மார் 20, 2025 01:24 AM
'மக்களை தேடி மருத்துவம்' திட்ட பயனைகூடுதலாக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தல்
ஓசூர்:சூளகிரி தாலுகாவில், 'உங்களை தேடி உங்கள் ஊரில்' திட்டத்தில், மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் நேற்று காலை, 9:00 முதல் கள ஆய்வு மேற்கொண்டனர். இம்மிடிநாயக்கனப்பள்ளியில், அங்கன்வாடி மைய குழந்தைகள் பதிவேட்டை பார்டையிட்ட கலெக்டர் தினேஷ்குமார், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்களை தமிழ், ஆங்கில பாடப்புத்தகங்களை வாசிக்க செய்து, சிறப்பாக வாசித்த மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டினார். ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறையில் உள்ள திரையில், கணித திறன் குறித்து மாணவர்களின் செயல் விளக்கத்தை பார்வையிட்டார்.
சூளகிரி மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார சுகாதார நிலையத்தில் ஆய்வு செய்து, 'மக்களை தேடி மருத்துவம்' திட்டத்தில், பொதுமக்கள் கூடுதலாக பயன் பெறும் வகையில், திட்டத்தை செயல்படுத்த, மருத்துவர்களுக்கு அறிவுறுத்தினார். சூளகிரி ஒன்றிய அலுவலகத்தில், கள ஆய்வு மேற்கொண்ட அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆய்வு கூட்டம் நேற்று மாலை நடந்தது. அதில் பேசிய கலெக்டர், பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், ஒவ்வொரு பணியையும் விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டார்.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் மலர்விழி, ஓசூர் சப் கலெக்டர் பிரியங்கா, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்ன பாலமுருகன், தாசில்தார் வளர்மதி உட்பட பலர்
பங்கேற்றனர்.