/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூரில் பாறைகள் அதிகமுள்ளதால் பாதாள சாக்கடை பணியில் தொய்வு
/
ஓசூரில் பாறைகள் அதிகமுள்ளதால் பாதாள சாக்கடை பணியில் தொய்வு
ஓசூரில் பாறைகள் அதிகமுள்ளதால் பாதாள சாக்கடை பணியில் தொய்வு
ஓசூரில் பாறைகள் அதிகமுள்ளதால் பாதாள சாக்கடை பணியில் தொய்வு
ADDED : ஏப் 09, 2025 01:33 AM
ஓசூரில் பாறைகள் அதிகமுள்ளதால் பாதாள சாக்கடை பணியில் தொய்வு
ஓசூர்:ஓசூர் மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 வார்டுகளில், 20 வார்டுகளில் முழுமையாகவும், 15 வார்டுகளில் பகுதியாகவும், 582.54 கோடி ரூபாய் மதிப்பில் பாதாள சாக்கடை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கு மத்திய அரசு, 170.56 கோடி ரூபாய், மாநில அரசு, 155.06 கோடி ரூபாய், ஓசூர் மாநகராட்சி நிர்வாகம், 256.92 ரூபாய் வழங்குகின்றன. ஓசூர் மாநகராட்சி நிர்வாகத்திடம் அவ்வளவு நிதி இல்லாததால், ஜெர்மன் நாட்டிடம் கடனுதவி பெற்றுள்ளது.
மேடு, பள்ளம் மற்றும் பாறைகள் நிறைந்த பகுதியாக ஓசூர் உள்ளது. அதனால், இங்கு பாதாள சாக்கடை திட்டத்தை மேற்கொள்வது அவ்வளவு எளிதல்ல என்பதால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம், பல்வேறு கட்ட ஆய்வுகள் செய்யப்பட்ட பின் தான், நிதி ஒதுக்கீடு பெற்று, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ஓசூரில் மேடு, பள்ளமான பகுதி என்பதால், 11 இடங்களில் பம்பிங் ஸ்டேஷன் (கழிவு நீரேற்றும் நிலையம்) அமைக்கப்படுகிறது.
குறுகிய தெருக்களில், 8 இன்ச் முதல், அதிக நீர் வரும் மெயின் தெருக்களில், 40 இன்ச் வரையிலான குழாய்கள் பதிக்கப்பட உள்ளன. தற்போது, 8 இன்ச் குழாய்கள் பதிக்கும் பணி துவங்கி உள்ளன. ஓசூரிலுள்ள நிலங்களில் அதிகளவு பாறைகள் உள்ளதால், அவற்றை உடைக்க ஏர்கம்ப்ரசருடன் கூடிய டிராக்டர், பாறைகளை உடைக்கும் பொக்லைன் பயன்படுத்தப்
படுகின்றன. அதனால், பள்ளம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மாவட்ட கலெக்டரிடம், வெடி வைக்க சிறப்பு அனுமதி பெற்று, வெடி வைத்து பாறைகள் அகற்றப்படுகின்றன. வரும், 2027 ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடிக்க வேண்டும். இப்பணி, 3 ஒப்பந்ததாரர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாறைகள் நிறைந்த ஓசூர் பகுதியில், 3 ஆண்டுகளில் பணிகள் முடிவது சிரமம் என கூறப்படுகிறது.