/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சட்டசபை தேர்தலில் தி.மு.க., இலக்கு 200ஐ தாண்டும்; அமைச்சர் சக்கரபாணி
/
சட்டசபை தேர்தலில் தி.மு.க., இலக்கு 200ஐ தாண்டும்; அமைச்சர் சக்கரபாணி
சட்டசபை தேர்தலில் தி.மு.க., இலக்கு 200ஐ தாண்டும்; அமைச்சர் சக்கரபாணி
சட்டசபை தேர்தலில் தி.மு.க., இலக்கு 200ஐ தாண்டும்; அமைச்சர் சக்கரபாணி
ADDED : ஜன 22, 2025 01:32 AM
சட்டசபை தேர்தலில் தி.மு.க., இலக்கு 200ஐ தாண்டும்; அமைச்சர் சக்கரபாணி
கிருஷ்ணகிரி, :''நா.த.க.,விலிருந்து விலகி, தி.மு.க.,வில் சேர்ந்த தம்பிகளால், வரும் சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வின் இலக்கு, 200ஐ தாண்டும்,'' என, அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
கிருஷ்ணகிரியில், நா.த.க., - அ.தி.மு.க., - பா.ஜ., மற்றும் பல்வேறு கட்சிகளிலிருந்து விலகியவர்கள், 1,300 பேர், தி.மு.க.,வில் இணையும் விழா நடந்தது. மாவட்ட அவைத்
தலைவர் தட்ரஹள்ளி நாகராஜ் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி முன்னிலையில், நா.த.க.,விலிருந்து விலகிய மாவட்ட செய்தி தொடர்பாளர் கவுதமன், கிழக்கு ஒன்றிய செயலாளர் சூர்யா, பர்கூர் சட்டசபை தொகுதி தலைவர் சக்திவேல் மற்றும் காவேரிப்பட்டணம் நிர்வாகிகள் உள்ளிட்டோர் தலைமையில், 1,000 பேர் தங்களை, தி.மு.க.,வில் இணைத்துக் கொண்டனர்.
அதேபோல, அ.தி.மு.க., மீனவரணி ஊத்தங்கரை ஒன்றிய செயலாளர் ரத்னம் மற்றும் பா.ஜ., மண்டல பொதுச்செயலாளர் சங்கீதா தலைமையில், 300க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் தங்களை இணைத்துக் கொண்டனர். நிகழ்ச்சியில், அமைச்சர் சக்கரபாணி பேசியதாவது: பெண்ணுரிமைக்கு போராடிய,
ஈ.வெ.ரா.,வை நா.த.க., ஒருங்கிணைப்பாளர் சீமான், யாருக்காகவோ விமர்சித்து வருகிறார். அதனால் தான், ஆயிரக்கணக்கான தம்பிகள் இன்று கிருஷ்ணகிரியில், தி.மு.க.,வில் இணைந்துள்ளீர்கள். பல இடங்களிலும், தி.மு.க.,விற்கு படையெடுக்கிறீர்கள். இண்டியா கூட்டணியை உருவாக்கியவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இக்கூட்டணி தமிழகத்தில், 40 தொகுதிகளிலும் வென்றது.
வரும் சட்டசபை தேர்தலில், 200 தொகுதிகள், என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் இளைஞர்கள் வருகையால், அது கண்டிப்பாக உயரும். இவ்வாறு, அவர் பேசினார்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட துணை செயலாளர்கள் சாவித்திரி கடலரசு மூர்த்தி, கோவிந்தசாமி, பொருளாளர் கதிரவன், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட நிர்வாகி
கள் கலந்து கொண்டனர்.