/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'22, 23ல் கலைக்குழுக்கள் தேர்வு முகாம்

ADDED : மார் 19, 2025 01:32 AM
'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'22, 23ல் கலைக்குழுக்கள் தேர்வு முகாம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறை சார்பில், 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'வில் பங்கேற்க விரும்பும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சி பதிவுகள், கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக்கல்லுாரியில் வரும், 22 மற்றும், 23ல், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை மேற்கொள்ளப்பட
உள்ளது. நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், பறையாட்டம், பம்மை கைச்சிலம்பாட்டம், இறை நடனம், துடும்பாட்டம், ஜிக்காட்டம், கிராமிய பாட்டு மற்றும் பல்சுவை நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுக்கள் வரும், 22ல் பதியலாம்.
தெருக்கூத்து, இசை நாடகம், நாடகம், கனியான் கூத்து, பொம்மலாட்டம், தோல்பாவை கூத்து, வில்லுப்பாட்டு, தேவராட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், மல்லர் கம்பம், கும்மி, கோலாட்டம், மரக்கால் ஆட்டம், பரதநாட்டியம், பழங்குடியினர் நடனம் நிகழ்ச்சி நடத்துவோர் மற்றும் இதர கலைக்குழுவினர்களின் நிகழ்ச்சிகள் வரும், 23ல் பதியலாம். இதில் சிறப்பான நிகழ்ச்சி வழங்கும் கலைக்குழுவினர், 'சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா'விற்கு தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.