/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சியுடன் சேர்க்க பிப்., 4ல் கிருஷ்ணகிரியில் கருத்து கேட்பு கூட்டம்

ADDED : ஜன 29, 2025 01:07 AM
ஊராட்சிகளை மாநகராட்சி, நகராட்சியுடன் சேர்க்க பிப்., 4ல் கிருஷ்ணகிரியில் கருத்து கேட்பு கூட்டம்
கிருஷ்ணகிரி, : கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு வெளியிட்டுள்ள அறிக்கை:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஓசூர் மாநகராட்சியுடன் பேகேப்பள்ளி, நல்லுார், ஒன்னல்வாடி, கொத்தகொண்டப்பள்ளி, சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்ட பேரண்டப்பள்ளி பஞ்.,களுக்கு உட்பட்ட கிராமங்கள் முழுமையாக இணைக்கப்படுகிறது. சென்னசந்திரம் பஞ்.,ல் விஸ்வநாதபுரம், தொரப்பள்ளி அக்ரஹாரம் பஞ்.,க்கு உட்பட்ட குமுதேப்பள்ளி, காந்திநகர், எல்லம்மா கொத்துார் உள்ளிட்ட கிராமங்கள், ஓசூர் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. மேலும், கிருஷ்ணகிரி நகராட்சியுடன் கட்டிக்கானப்பள்ளி பஞ்.,க்கு உட்பட்ட, 31 கிராமங்கள் இணைக்கப்படுகிறது. அதேபோல சூளகிரி, ராயக்கோட்டை பஞ்.,கள் டவுன் பஞ்.,களாக தரம் உயர்த்தப்படுகிறது. இதில், சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட, 11 கிராமங்கள் சூளகிரியில் டவுன் பஞ்சாயத்திலும், ராயக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட, 12 கிராமங்கள் ராயக்கோட்டை டவுன் பஞ்சாயத்திலும் இணைக்கப்படுகிறது. பாகலுார் ஊராட்சி, டவுன் பஞ்., ஆக தரம் உயர்த்தப்பட்டு, பாகலுார் பஞ்., முழுமையாகவும், பெலத்துார் பஞ்.,ல் சூடாபுரம் கிராமம் மட்டும் இணைக்கப்படுகிறது. உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சி, நகராட்சியுடன் சேர்த்தல் மற்றும் டவுன் பஞ்.,களாக தரம் உயர்த்துதல் தொடர்பாக கலெக்டர் தலைமையில் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், தேர்வு செய்யப்பட்ட தலைவர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் குடியிருப்போர்கள் நலச்சங்க பிரதிநிதிகளின் கருத்துகள் கேட்பதற்கான ஆலோசனை கூட்டம் வருகிற பிப்., 4 காலை, 10:00 மணிக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், கலந்து கொண்டு தங்கள் கருத்துக்களை அனைவரும் தெரிவிக்கலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.