ADDED : ஜன 17, 2025 12:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அடுத்த அக்கொண்டப்பள்ளி ஓம் சக்தி அம்மனுக்கு, 21 நாள் மாலை அணிந்து பக்தர்கள் விரதம் கடைப்பிடித்தனர். விரதம் முடிந்து நேற்று, ஓம் சக்தி மாரியம்மனுக்கு, அதிகாலை முதல் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரம் செய்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் சுவாமி ஊர்வலம் கொண்டு செல்லப்பட்டது. அதன்பின், மக்கள் அனைவரும் நலமாக வாழ அர்ச்சனைகள் செய்து சுவாமிக்கு மகா தீபாரதனை நடந்தது.
முன்னாள் பைரமங்கலம் பஞ்., துணைத்தலைவர் வெங்கடேஷ், குரு சக்தி, அக்கொண்டப்பள்ளி கிராம ஓம் சக்தி பக்தர்கள் மற்றும் சுற்றுப்புற கிராமத்தினர் கலந்து கொண்டனர்.