/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் 'சிசிடிவி'போலீசார் கண்காணிப்பு பணி
/
கே.ஆர்.பி., அணையில் 'சிசிடிவி'போலீசார் கண்காணிப்பு பணி
கே.ஆர்.பி., அணையில் 'சிசிடிவி'போலீசார் கண்காணிப்பு பணி
கே.ஆர்.பி., அணையில் 'சிசிடிவி'போலீசார் கண்காணிப்பு பணி
ADDED : ஜன 17, 2025 12:56 AM
கிருஷ்ணகிரி,: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு, உள்ளூர் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். ஆடிப்பெருக்கில், 5,000 முதல், 10,000 சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இறந்தவர்களுக்கு திதி கொடுக்க ஏராளமானோர் வாகனங்களில் வந்து செல்கின்றனர். இதை பயன்படுத்தி சிலர் கூட்டத்தில் புகுந்து நகை, பணம் மற்றும் டூவீலர்களை திருடி செல்வது வாடிக்கையாக இருந்து வந்தது. இளைஞர்கள் பலர் பெண்களுடன் வந்து, குடித்து கும்மாளமிடுவதும் அதிகரித்து வந்தது.
புகார் படி, கே.ஆர்.பி., அணை போலீசார் தற்போது, 2 அணை நுழைவாயில் பகுதிகளில், 4 'சிசிடிவி' கேமரா, அணைக்கு செல்லும் வழியிலுள்ள துவாரகாபுரி கிராம நுழைவாயிலில், 2 'சிசிடிவி' கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகின்றனர்.
இதன்மூலம், திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுவோரையும், பெண்களுடன் சுற்றித்திறியும் இளைஞர்களையும், கண்காணிப்பது சுலபமாக உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர். இதனால் வாகன திருட்டு தடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.