/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தன்வந்திரி கோவிலில் கொடியேற்று விழா
/
தன்வந்திரி கோவிலில் கொடியேற்று விழா
ADDED : ஜன 23, 2025 01:43 AM
தன்வந்திரி கோவிலில் கொடியேற்று விழா
ஓசூர், :ஓசூர், அதியமான் இன்ஜினியரிங் கல்லுாரி வளாகத்தில் கட்டப்பட்டுள்ள, தன்வந்திரி கோவில் கும்பாபிஷேகம் கடந்த, 19ல் நடந்தது.
தொடர்ந்து நேற்று கொடியேற்ற விழா நடந்தது. முன்னதாக, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, பூஜை நடந்தது. தன்வந்திரி சுவாமிக்கு கலச நீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம் மற்றும் ராஜ அலங்காரம் செய்யப்பட்டது. அதியமான் கல்வி நிறுவனங்கள் தலைவர் தம்பிதுரை எம்.பி., அறக்கட்டளை தலைவர் பானுமதி தம்பிதுரை, அறக்கட்டளை உறுப்பினர்கள் டாக்டர் லாசியா தம்பிதுரை, வேளாங்கண்ணி பள்ளி குழும தாளாளர் கூத்தரசன், அதியமான் கல்வி குழும இயக்குனர் ரங்கநாத், மேலாளர் நாராயணன், கோவில் அறங்காவலர் சுரேஷ்பாபு, எஸ்.டி.ஆர்.ஆர்., விவசாயிகள் சங்க தலைவர் முனிவெங்கடப்பா, செயலாளர் அருண்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன் உட்பட, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். வரும், 25ல் ஆராட்டு விழா நடக்கிறது.

