/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
நாட்டாண்மைகொட்டாய் அரசு பள்ளி ஆண்டு விழா
/
நாட்டாண்மைகொட்டாய் அரசு பள்ளி ஆண்டு விழா
ADDED : ஜன 29, 2025 01:06 AM
கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அடுத்த சுண்டேகுப்பம் பஞ்.,க்கு உட்பட்ட நாட்டாண்மைகொட்டாய் அரசு உயர்நிலைப்பள்ளி ஆண்டு விழா நடந்தது. தலைமை ஆசிரியை மணிமேகலை தலைமை வகித்து, ஆண்டறிக்கையை வாசித்தார். தமிழ் ஆசிரியை ஜெயக்கொடி வரவேற்றார். பி.டி.ஏ., தலைவர் பெருமாள் முன்னிலை வகித்தார். இப்பள்ளியில் புதிய புரவலர்களாக சேர்ந்தவர்களுக்கு சால்வை அணிவித்து, மஞ்சப்பை வழங்கப்பட்டது. பிளாஸ்டிக்கை தவிர்த்து, மஞ்சப்பை பயன்படுத்துவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஆண்டுவிழாவையொட்டி மாணவர்
களுக்கு கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி உள்பட, பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. பள்ளி ஆசிரியைகள் சுமதி, சாந்தா, பள்ளி மேலாண்மை குழுவினர் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து
கொண்டனர்.