ADDED : பிப் 02, 2025 01:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தி.மு.க., வினர் அமைதி பேரணி
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை: அண்ணாதுரையின், 56வது நினைவு தினத்தையொட்டி கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் அமைதி பேரணி நாளை (3ந்தேதி) நடக்கிறது. மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., தலைமை வகிக்கிறார். கிருஷ்ணகிரி, பெங்களூரு ரோடு, சென்ட்ரல் தியேட்டர் அருகில் துவங்கும் பேரணி, பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள அண்ணாதுரை சிலை அருகில் நிறைவடைகிறது. தொடர்ந்து அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில், மாவட்டத்திலுள்ள அனைத்து நிர்வாகிகள், பொதுமக்கள் உள்பட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.