/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எம்.சாண்ட், மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்
/
எம்.சாண்ட், மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்
ADDED : பிப் 08, 2025 12:42 AM
எம்.சாண்ட், மண் கடத்திய இரு லாரிகள் பறிமுதல்
ஓசூர்,: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பிதிரெட்டி வி.ஏ.ஓ., முருகன், ராயக்கோட்டை சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகிலும், போடிச்சிப்பள்ளி வி.ஏ.ஓ., வினோத், தனியார் கிரானைட் கம்பெனி அருகிலும் தனித்தனியாக வாகன சோதனை செய்தனர். அப்போது அவ்வழியாக வந்த இரு டிப்பர் லாரிகளை நிறுத்தி, சந்தேகத்தின் பேரில் சோதனை செய்த போது, ஒரு லாரியில், 9,000 ரூபாய் மதிப்புள்ள, 6 யூனிட் எம்.சாண்ட், மற்றொரு லாரியில், 3,000 ரூபாய் மதிப்புள்ள, 6 யூனிட் மண் இருந்தன. இதனால் இரு லாரிகளையும் பறிமுதல் செய்த வி.ஏ.ஓ.,க்கள், கெலமங்கலம் போலீசில் ஒப்டைத்தனர். போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவர்களை தேடி வருகின்றனர்.