/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பிரசார பயணம்
/
கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பிரசார பயணம்
கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பிரசார பயணம்
கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பிரசார பயணம்
ADDED : பிப் 08, 2025 12:43 AM
கிருஷ்ணகிரியில் சுற்றுச்சூழல்விழிப்புணர்வு பிரசார பயணம்
கிருஷ்ணகிரி: மத்திய, மாநில அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன், கடமலைக்குண்டு லா தொண்டு நிறுவனம் மற்றும் தேசிய பசுமைப்படை இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரு நாட்கள், அரசுப்பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வண்டி பிரசார பயணம், கலைநிகழ்ச்சிகளுடன் நேற்று துவங்கியது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பிரசார விழிப்புணர்வு நிகழ்ச்சியை, சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் வெங்கடேசன் துவக்கி வைத்து பேசுகையில், ''நாம் உண்ணும் உணவு, சுவாசிக்கும் காற்று, அமர்ந்திருக்கும் நிழல் என அனைத்தையும் சுற்றுச்சூழல் தருகிறது. எனவே சுற்றுச்சூழலுக்கு எதிராக நாம் எந்த பொருட்களையும் பயன்படுத்தக் கூடாது. குறிப்பாக இயற்கையை மாசுப்படுத்தும், பிளாஸ்டிக் பொருட்களை பயன்
படுத்தவே கூடாது. சுற்றுச்சூழலை பாதுகாப்போம். வருங்கால சந்ததியினருக்கு மாசற்ற காற்றை விட்டுச் செல்வோம்,'' என்றார்.
சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் தீர்த்தகிரி, பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் முன்னிலையில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை, லா தொண்டு நிறுவன செயலாளரும், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளருமான வேங்கடேசன் செய்திருந்தார்.