/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ADDED : பிப் 18, 2025 01:06 AM
அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம்
ஊத்தங்கரை:ஊத்தங்கரை மத்திய ஒன்றிய பகுதியில், அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமை வகித்தார். இதில், அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனப்பள்ளி எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி பேசினார். கூட்டத்தில், கிழக்கு மாவட்ட செயலாளரும், கிருஷ்ணகிரி எம்.எல்.ஏ.,வுமான அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து நிருபர்களிடம் முனுசாமி எம்.எல்.ஏ., கூறுகையில், ''தேசிய கல்வி கொள்கையை முழுமையாக ஏற்று கொண்டால் தான், தமிழகத்திற்கு முழுமையான நிதி, மத்திய அரசிடமிருந்து கிடைக்கும் என, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தி பேசாத மாநிலங்களை மிரட்டுகின்ற வகையில் கூறியுள்ளார். அது வன்மையாக கண்டிக்கத்தக்கது,'' என்றார்.