/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்
/
திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்
திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்
திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்
ADDED : பிப் 19, 2025 01:18 AM
திறந்தவெளியில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த வடமலம்பட்டி பகுதி பாலாஜி நகர் குடியிருப்பு பகுதி அருகே சாலையோரம், பயன்படுத்தப்பட்ட குளுக்கோஸ் பாட்டில்கள், சிரஞ்ச், கட்டுத்துணிகள், மாஸ்க், கிளவுஸ் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றுள்ளனர். கடந்த சில தினங்களாக கொட்டப்பட்டு வரும் மருத்துவக் கழிவுகளால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. அப்பகுதியில் சுற்றித்திரியும் நாய்கள், அதை இழுத்து சாலைகளில் போட்டு செல்வதால், சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பரமசிவம் கூறுகையில், ''அருகிலுள்ள மருத்துவமனைகளிலிருந்து மருத்துவக்கழிவுகள் கொட்டப்படுகிறதா அல்லது வேறு நபர்கள் கொட்டி செல்கின்றனரா என்பது குறித்து, கண்காணித்து, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்,''
என்றார்.