/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புதி.மு.க., மாணவரணி போராட்டம்
/
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புதி.மு.க., மாணவரணி போராட்டம்
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புதி.மு.க., மாணவரணி போராட்டம்
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புதி.மு.க., மாணவரணி போராட்டம்
ADDED : பிப் 26, 2025 01:19 AM
மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்புதி.மு.க., மாணவரணி போராட்டம்
கிருஷ்ணகிரி:ஹிந்தி மொழியை திணிக்க, மத்திய அரசு முயல்வதாகவும், புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் கல்விக்கான நிதியை தமிழகத்திற்கு தர மறுப்பதாகவும் கூறி, கிருஷ்ணகிரி, கிழக்கு மாவட்ட மாணவரணி சார்பில் போராட்டம் நடந்தது. மாணவரணி அமைப்பாளர் ஜெயேந்திரன் தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி முன்னிலை
வகித்தனர்.கிருஷ்ணகிரி தாலுகா அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக சென்ற, தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி
களான, காங்., - வி.சி., நிர்வாகிகள், கிருஷ்ணகிரி தலைமை அஞ்சல் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஹிந்தி படிக்க வேண்டாம் என, தமிழக அரசு கூறவில்லை. விருப்ப மொழி எதையும் படிக்கலாம். ஆனால், அது ஹிந்தியாக இருக்க வேண்டும் என்பதும், மும்மொழி கொள்கையை வலுக்கட்டாயமாக மாநில அரசுகள் மீது மத்திய, பா.ஜ., அரசு திணிப்பதையும் ஏற்க முடியாது. மாநில உரிமையை யார் பறிக்க நினைத்தாலும், தி.மு.க., அரசு எதிர்த்து நின்று போராடும், என பேசினர். தொடர்ந்து, தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயலும் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். அஞ்சல் நிலைய வாசலில் இருந்த இந்தியா போஸ்ட் ஏ.டி.எம்., பலகையில் இருந்த, ஹிந்தி எழுத்துக்களை கருப்பு மை பூசி அழித்தனர். தி.மு.க., கவுன்சிலர்கள், மாணவரணி நிர்வாகிகள், காங்., மற்றும் வி.சி.,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
* ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டியில், தி.மு.க., மத்துார் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான நரசிம்மன் தலைமையில், ஹிந்தி எதிர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில், ஹிந்தி எதிர்ப்பு துண்டு பிரசுரங்களை வழங்கினர். நிர்வாகிகள் சேகர், காதர், புகழேந்தி, லயோலா ராஜசேகர், மாவட்ட, காங்., பொதுச்செயலாளர் மனோகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

